இத்தாலியிலிருந்து , இலங்கைக்கு அனுப்பப்பட்ட 212 மில்லியன் ரூபாய் பெறுமதியான அஸிஸ் ரக போதைப்பொருள் சுங்கத் திணைக்களத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள பொதி சேவைகள் நிறுவனமொன்றுக்கு அனுப்பப்பட்டிருந்த பொதி ஒன்றிலிருந்தே குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன்போது 30 கிலோகிராம் நிறையுடைய போதைப்பொருள் தொகை மீட்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.