ஐபிஎல் வீரர்களின் பதிவு நவம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவுப்பெற்றநிலையில் இலங்கையைச் சேர்ந்த 23 வீரர்கள் உட்பட மொத்தம் 991 வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
2022, டிசம்பர் 23 அன்று கொச்சியில் நடைபெறவுள்ள, டாட்டா ஐபிஎல்( TATA IPL 2023) வீரர்கள் ஏலத்தில் பங்கேற்பதற்காக கையெழுத்திட்டுள்ளனர்.
அந்தவகையில் ஐபிஎல் 2023 வீரர்கள் ஏலத்தில் மொத்தம் 714 இந்திய வீரர்கள் மற்றும் 277 வெளிநாட்டு வீரர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
வீரர்கள் பட்டியலில் 185 சர்வதேச அணிகளின் வீரர்கள், 786 சர்வதேச அறிமுகம் அற்ற வீரர்கள் உள்ளனர்.
வீரர்களின் பட்டியல்
இந்தியன் தேசிய அணியின் (19 வீரர்கள்) சர்வதேச அணிகளின் (166 வீரர்கள்) இணை அங்கத்துவ நாடுகளின் (20 வீரர்கள்) நாடு வாரியாக 277 வெளிநாட்டு வீரர்களின் விபரம் பட்டியலிடப்பட்டுள்ளது .
ஆப்கானிஸ்தான் – 14
அவுஸ்திரேலியா – 57
பங்களாதேஷ் – 6
இங்கிலாந்து – 31
அயர்லாந்து – 8
நமீபியா – 5
நெதர்லாந்து – 7
நியூசிலாந்து – 27
ஸ்கொட்லாந்து – 2
தென்னாப்பிரிக்கா – 52
இலங்கை – 23
ஐக்கிய அரபுராச்சியம் – 6
மேற்கித்திய தீவுகள் – 33
சிம்பாப்வே – 6