கண்டி, போகம்பர ஏரியில் இருந்து பெண் ஒருவரின் சடலம் பொலிஸாரால்மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 31 வயதுடைய பெண்ணின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை (20-06-2023) மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் கண்டி, அம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறப்பிற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், இது தற்கொலையா என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.