கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக திறப்பனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் அநுராதபுரம், மிஹிந்தலை பகுதியில் வசிக்கும் 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் கூறியுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் மெல்சிரிபுர பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வரும் நிலையில், தனது பணியை முடித்து விட்டு மீண்டும் வீடு நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கும் போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சடலமாக மீட்கப்பட்டவர் வாகனமொன்றில் பயணிக்கும் போது கீழே தவறி வீழ்ந்து உயிரிழந்தாரா அல்லது வீதியில் பயணிக்கும் போது வாகனமொன்று மோதி உயிரிழந்தாரா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.