அடுத்த வாரமளவில் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாக அந் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் , லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரிக்கக்கூடும் எனவும் அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 6,000 ரூபாவை விட அதிகரிக்கும் என தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை, லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்று விநியோகிக்கப்படாது என நிறுவனம் தெரிவித்துள்ளது. 2,500 மெட்ரிக் தொன்கள் எரிவாயுவுடன் கூடிய கப்பல் ஒன்று நாளை நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் செவ்வாய்கிழமை முதல் எரிவாயு விநியோகத்தை மீள ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக Litro தெரிவித்துள்ளது.
மேலும் அதுவரை பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ எரிவாயு நுகர்வோரை கேட்டுக்கொண்டுள்ளது