இவ்வருட இறுதியில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாதாந்த எரிபொருள் விலை திருத்தமே இதற்குக் காரணம் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும் எரிபொருளில் புதிதாக 18% வெட் வரி சேர்க்கப்பட உள்ளதாகவும், ஆனால் எரிபொருளில் இருந்து 8% துறைமுக கட்டணங்கள் நீக்கப்பட்டதால், எரிபொருள் விலை 10% மட்டுமே அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த விலை திருத்தங்கள் ஜனவரி 1, 2024 முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கூறப்படுகின்றது.