கடந்த நாட்களில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட 429 சுற்றிவளைப்புகளின் போது சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 59,000 லீற்றர் எரிபொருள் மீட்கப்பட்டுள்ளது.
இதன்படி, 27,000 லீற்றர் பெற்றோலும் , 22,000 லீற்றர் டீசலும் , 10,000 லீற்றர் மண்ணெண்ணெயும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் போன்றவற்றை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்தமை தொடர்பில் நாடளாவிய ரீதியில் 137 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும் சட்டவிரோதமாக எரிபொருள் பதுக்கி விற்பனை செய்து வருபவர்களை கைது செய்ய நாடளாவிய ரீதியான சுற்றிவளைப்புகள் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.