உள்நாட்டில் எரிபொருள் விலை அடுத்த சில மாதங்களில் குறைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து கச்சா எண்ணெய் விலை கணிசமாக அதிகரித்தது.
இருப்பினும் தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், அடுத்த சில மாதங்களில் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளாந்த தேவை
இதேவேளை நாட்டில் எரிபொருளுக்கான நாளாந்த தேவை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்தும் QR குறியீட்டு முறை மற்றும் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி என்பன தேவை குறைவதற்கு காரணம் என தெரிவித்துள்ளது.