கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த மூன்று எரிபொருள் கப்பல்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட கப்பல்களில் இருந்து எரிபொருளை இறக்கும் பணி இன்று (16) தொடங்கும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
எரிபொருள்
அதன்படி, அந்தந்த கப்பல்களில் 37,000 மெட்ரிக் தொன் டீசல், 100,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் மற்றும் 20,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் ஆகியவை அடங்கும்.
மேலும் சராசரியாக 4,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 3,000 மெட்ரிக் தொன் பெற்றோல் நாடு முழுவதும் விநியோகிக்கப்படுகிறது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.