தற்போதைய நிலையில் தமது கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
நாம் நிச்சயமாக நமக்கு என்ற ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் நமது தலைவர்கள் திருந்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.