எம்.பி.க்களின் கூடுதல் துப்பாக்கியாக ரிப்பீட்டர் ஆயுதங்களை வழங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பிஸ்டல் தவிர, எம்.பி.க்களின் பாதுகாப்பிற்காக ரிப்பீட்டர் ஆயுதங்களையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 225 எம்.பி.க்களுக்கும் ரிப்பீட்டர் ஆயுதங்கள் வழங்கப்பட உள்ளன.
இது தொடர்பில் நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு அறிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இதுவரையில் சுமார் 05 பாராளுமன்ற உறுப்பினர்கள் ரிபீட்டர் ஆயுதங்களைப் பெற விண்ணப்பித்துள்ளதாக சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்டணம் செலுத்திய பின்னர் ஆயுதங்கள் வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.