தமிழகம் தஞ்சாவூர் வடக்குவீதியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் எம்.ஜிஆரின் சிலை உடைக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை தஞ்சாவூரில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அங்கு சென்ற சிலர், எம்.ஜி.ஆர். சிலையை உடைக்க முயன்றனர்.
எனினும் அதனை உடைக்க முடியாததால் அதனைப் பெயர்த்து விட்டு தப்பியோடியுள்ளனர்.
இதனையடுத்து அந்த இடத்தில் பதற்ற நிலை தோன்றியது. இந்தநிலையில் குறித்த சிலையை உடைத்தவர், குடிபோதையில் இருந்த ஒருவர் என்று தெரியவந்துள்ளது.