இலங்கையில் வெட்ட வெயிலில், பெற்றோல் வாங்க வரிசையில் காத்திருக்கும் தாயின் மோட்டார் சைக்கிள் ஒன்றில் அசதியில் கண்ணயரும் குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அம்பாறையில் உள்ள எரிபொருள் நிலையமொன்றில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள் நீண்டநேரம் காத்திருந்து பொருட்களை வாங்கிச்செல்லவேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பொருட்களை பெறுவதற்காக வெயில் மழை பாராது வாரிசையில் காத்திருக்கும் இந்த அவலம் என்றுதான் முடிவுக்கு வருமோ என பல்லரும் கவலை வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை இந்த நெருக்கடிக்கு காரணமான அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி கடந்த ஒருவாராமாக காலிமுகத்திடலில் மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.