எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு 6 மணித்தியாலங்களுக்கு முன்னர் பொலிஸாருக்கு அறிவித்து அனுமதி பெறுவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சால் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
போராடும் உரிமைக்கு தடையில்லை
மக்களின் போராடும் உரிமையை நாம் ஏற்கின்றோம். அதற்கு தடை இல்லை. ஆனால் அனுமதி பெறப்பட வேண்டும். சட்டம், ஒழுங்கை மீறும் வகையிலான போராட்டங்களையே பாதுகாப்பு தரப்பு கட்டுப்படுத்தும் என கூறினார்.
அதேபோல உயர்பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்களின் நாளாந்த பணியை முன்னெடுக்க தடை ஏதும் இல்லை என்றும் பதில் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.