எதிர்காலத்தில் நடைபெறவுள்ள வழமையான பரீட்சைகள் தாமதமடைய வாய்ப்புள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை வெற்றிகரமாக நிறைவடைந்த போதிலும், இரண்டு பரீட்சைகளுக்கு இடையிலான மூன்று மாத இடைவெளி குறைக்கப்பட்டமையினால் விடைத்தாள் திருத்தப்பணிகள் இரண்டு வாரங்கள் தாமதமாகியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடுவதில் தாமதம் ஏற்படுவதால், பெறுபேறுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுகின்றது.
இதன் காரணமாக சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்கு கால தாமதம் ஏற்பட கூடும் எனவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டினார்.