ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களினால் மீட்கப்பட்டதாக கூறப்படும் பணத்தொகை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஜனாதிபதி மாளிகையில் இருந்து மீட்கப்பட்ட சுமார் ஒரு கோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தொகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.
இந்த சம்பவம் இடம்பெற்று 3 வாரங்கள் நிறைவடைந்துள்ள போதும் பணத்தொகை தொடர்பில் நீதிமன்றுக்கு எந்தவொரு அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை என கொழும்பு கோட்டை நீதிவான் நேற்று சுட்டிக்காட்டியிருந்தார்.
அத்துடன், மீட்கப்பட்ட பணத்தொகையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கோட்டை நீதிவான் நேற்று உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் குறித்த பணத்தொகை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.