கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கையில் சூழ்நிலைகளை சமாளிக்க முடியாமல் வெளிநாடு ஒன்றுதான் தீர்வு என்று முடிவெடுத்து அவசர அவசரமாக தனது சொத்துகளை விற்று அல்லது கடன் வாங்கிக்கொண்டு வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு ஒரு எச்சரிக்கை தகவல் வெளியாகியுள்ளது.
எஜென்சிகளின் பொய்களை நம்பி பல இலட்சங்களை செலவு செய்து சவூதி அரேப்பியாவுக்கு வேலைக்கு சென்ற இலங்கையர்களுக்கு வேலை வழங்கப்படாததால் நிறுவனங்களுக்கு முன் ஆர்ப்பாட்டங்களை செய்து தங்களின் துயரங்களை பகிரும் காணொளி ஒன்று பாதிக்கப்பட்ட நபரொருவரின் இலங்கையில் உள்ள ஊடகம் ஒன்றுக்கு அனுப்பட்டுள்ளது.
இதுபோல மற்றவர்களும் ஏமறக்கூடாது என்பதற்காக அவர் இந்த காணொளியை பகிருமாறு கோட்டுக்கொண்டதை அடுத்து குறித்த ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.