மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹைலெவல் வீதிக்கு அருகில் உள்ள கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 ஊழியர்கள் மீது கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுவர் விழுந்து காயமடைந்த ஊழியர்கள் இருவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் 45 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்த மற்றைய நபர் களுபோவில வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.