யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட தம்பாட்டி கிராமத்தில் உள்ள நண்டுபதனிடும் தொழிற்சாலையைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொழிற்சாலையைச் சேர்ந்த ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதனை அடுத்து அங்கு மேற்கொள்ளப்பட்ட எழுமாற்றான அன்டிஜன் பரிசோதனையில் 09 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த தொழிற்சாலையில் 70 பேர் வரையில் பணியாற்றுவதாகவும் அவர்களில் பெருமளவானவர்கள் அராலி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
ஏனையவர்களுக்கும் தம்பாட்டிக் கிராமத்தினைச் சேர்ந்த மக்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக சுகாதாரத் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.