தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை (01) நீக்கப்பட்ட போதிலும் மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இரண்டு வார காலத்திற்கு மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து அல்லது புகையிரத சேவைகள் இடம்பெறாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்குள் பேருந்து சேவைகள் வழமை போன்று இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.