எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது மார்ச் மாதம் 9ஆம் திகதி இடம்பெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கை இன்று (21) நண்பகல் 12.00 நிறைவடைந்தது.
அதன்பின்னர் பிற்பகல் 01.30 மணி வரை ஒன்றரை மணித்தியாலங்கள் ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்கான காலமாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
மேலும் வேட்புமனுத் தாக்கல் முடிந்தவுடன் தேர்தல் தினதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவிதிருந்த நிலையில் அதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது.