உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28 ஆம்திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பு இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தபால் மூல வாக்கெடுப்புக்கான உத்தியோகபூர்வ திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உறுதியளித்தவாறு அரச அச்சகத்தினால் உரிய வாக்குச்சீட்டுகள் வழங்கப்படாமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.