தமிழக மண்ணில் பிறந்து இன்று உலகையே தன் பக்கம் கவர்ந்திருக்கும் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சைக்கு இன்று 50வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார்.
அவரின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்ய நிகழ்வுகளை பற்றி பார்ப்போம்.
சுந்தர் பிச்சை ஒரு முறை யூடியூப் நடத்திய நிகழ்வில், தான் முதன் முதலாக அமெரிக்கா வந்தது தொடர்பாக குறிப்பிட்டு பேசியிருந்தார்.
பல வருடங்களுக்கு முன்பு தான் முதலாக அமெரிக்கா வந்தது தொடர்பாக பேசியிருந்தார்.
அதில் பல வருடங்களுக்கு முன்பு சுந்தர் பிச்சை படிப்பதற்காக அமெரிக்க வருவதற்காக, டிக்கெட்டிற்காக என் தந்தை அவரின் கிட்டதட்ட 1 வருட சம்பளத்தினை செலவிட்டதாக கூறியிருந்தார்.
அமெரிக்கா மிகுந்த செலவு மிகுந்த நாடு. நான் வீட்டிற்கு ஒரு நிமிடம் பேச வேண்டுமெனில் 2 டாலர்கள் செலவாகும். அப்படி நிலையில் இருந்து இன்று அவரின் ஒரு மாத சம்பளம் பல கோடி என்ற நிலைக்கு வளர்ந்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்து பின்னர், காரக்பூர் ஐஐடியில் பயின்றவர். கடந்த 2004ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.
கூகுள் டூல்பார் மற்றும் கூகுள் குரோம் ஆகியவற்றின் உருவாக்கத்திற்கும், முன்னேற்றத்திற்கும் இவர் பெரும் பங்கு வகித்தவர்.
இதைத்தொடர்ந்து 2015ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக நியமிக்கப்பட்டார். தற்போது ஆல்ஃபாஃபெட்டின் தலைமை செயல் அதிகாரியாகவும் உள்ளார்.
இரு அறைகளை மட்டுமே கொண்ட வீட்டில் வசித்து வந்த சுந்தர் பிச்சையின் வீட்டில் சொந்தமாக டிவி, கார் கூட அப்போது இல்லை.
ஆனால் தன் மகன் குறித்து தனி கவனம் செலுத்தி வந்த சுந்தர் பிச்சையின் தந்தை, தன் வேலையில் எதிர்கொண்ட சவால்கள் குறித்து பேசுவதை வழக்கமாக கொண்டிருப்பாராம். ஆக சிறு வயதிலேயே படிப்பின் மீது ஆர்வம் குறைவு இருந்தாலும், விளையாட்டில் அதிக ஆர்வம் உடையவர்.
இன்று உலகின் சிறந்த டெக் நிறுவனங்களில் தலைமை செயல் அதிகாரிகளில் அதிக சம்பளம் பெற்று வருவபவர்களில் சுந்தர் பிச்சையும் ஒருவர்.
இவரின் சம்பளம் 2015 முதல் 2020 வரையில் வருமானம் சுமார் 1 பில்லியன் டொலர். இதில் போனஸ் மற்றும் ஊக்கத்தொகைகளும் அடங்கும்.