வரும் 2023ம் ஆண்டில் 20 வயதே ஆன இலங்கை யுவதி ஒருவர் நிலவிற்கு செல்லவுள்ள நிலையில், அதன் மூலம் உலகளவில் இலங்கைக்கு அவர் பெருமையை தேடித்தந்துள்ளார்.
இளம் யுவதியான சந்தலி சமரசிங்க, Dear moon திட்டத்தின் கீழ் நாசா நிறுவனம் ஊடாக நிலவுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ள குழுவினரில் இடம்பிடித்துள்ளார்.
இதேவேளை கடந்த , 2019ஆம் ஆண்டு நாசா நிறுவனத்தில் விசேட பயிற்சி பெறுவதற்கு புலமைப் பரிசில் பெற்ற சந்தலி, தனது பொருளாதார நெருக்கடி தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து உதவி கோரியிருந்தார்.அவரது கோரிக்கையை ஏற்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் குறித்த யுவதிக்கு தேவையான பண உதவிகளை செய்து கொடுத்தார்.
இதன் மூலம் 2023ம் ஆண்டு நிலவுக்கு செல்ல வேண்டிய தெரிவு செய்யப்பட்ட 17 பேர் கொண்ட குழுவில் சந்தலியும் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில் தனக்கு உதவி புரிந்த முன்னாள் ஜனாதிபதியை சந்தித்த சந்தலி அவரிடம் ஆசி பெற்றதோடு தான் நிலவுக்கு செல்ல உள்ள செய்தியையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.