உயிரிழந்த சிசுவொன்றின் சடலத்தை வேறு பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் கம்பஹா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் குழந்தையின் உடலைப் பரிசோதித்த பின்னர் பெற்றோர் குறித்த சடலத்தை ஏற்க மறுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிசேரியன் முறை மூலம் பிரசவிக்கப்பட்டு கம்பஹா வைத்தியசாலைக்கு பராமரிப்பு பிரிவுக்கு அனுப்பப்பட்ட குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழந்தையின் விபரங்களில் குழப்பமடைந்த வைத்தியசாலை அதிகாரிகள் சடலத்தை வேறு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதனையடுத்து கம்பஹா பதில் நீதவான் மகேஷ் ஹேரத் குழந்தையின் சடலத்தை பரிசோதனை செய்வதற்காக பிரேத அறைக்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெற்றோர் மறுத்ததையடுத்து நீதவானின் உத்தரவுப்படி சிசுவின் பெற்றோரை அறிந்து கொள்ள மரபணு பரிசோதனை நடத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.