உக்ரைன் விவகாரத்தில் யார் தலையிட்டாலும் அவர்களுக்கெதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார் புடின்.
ரஷ்யாவை யாராவது அச்சுறுத்தினால், மின்னல் வேகத்திலும், மரணத்தை ஏற்படுத்தும் வகையிலும் தனது பதிலடி இருக்கும் என புடின் எச்சரித்துள்ளார்.
எங்களிடம் அதற்கான அனைத்து ஆயுதங்களும் உள்ளன, நாங்கள் வெறுமனே பெருமை பேசிக்கொண்டிருக்கமாட்டோம், அதற்கு பதில், எங்கள் ஆயுதங்களை பயன்படுத்திவிடுவோம் என்றார் அவர்.
விடயம் என்னெவென்றால், புடின் நேரடியாக அணு ஆயுதங்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை.
ஆனாலும், ரஷ்யா தனது சாத்தான் 2 ஏவுகணை என்று அழைக்கப்படும் Sarmat 2 அணு ஆயுத ஏவுகணையை சமீபத்தில் முதன்முறையாக பரிசோதித்ததுடன், உலகில் உள்ள எந்த ஆயுதமும் அதற்கு ஈடு இணை இல்லை என பெருமையடித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.