இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நடந்து வரும் போரில் இரு தரப்பிலும் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு தரப்புக்கும் இடையிலான மோதல்கள் மேலும் மோசமடைந்து வருவதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மோதலில் 600க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், பாலஸ்தீனத்தில் 413 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தாக்குதல்களில் இஸ்ரேலில் தங்கியிருந்த 10 நேபாள மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக நேபாள அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.