ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதல் நட்டஈடு தொடர்பான வழக்கில் , முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட பிரதிவாதிகள் உயர் நீதிமன்றில் இன்று முன்னிலையாகவுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி உயர் நீதிமன்றின் 7 நீதியரசர்கள் கொண்ட ஆயத்தினால், ஏப்ரல் 21 தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென உத்தரவிட்டது.
எனினும், பிரதிவாதிகள் உரிய இழப்பீடுகளை வழங்காததால், பல மனுதாரர்கள் பின்னர் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இதனையடுத்து , குறித்த மனுக்கள் இன்றைய தினம் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.