திருமணம் செய்யவிருந்த ஜோடியொன்று காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தனகலு ஓயாவின் கிளையான எல் ஓயாவில் நீராடச் சென்ற போது அதில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் வெயாங்கொடை, மெதவத்தை பிரதேசத்தில் இருந்து நேற்று (07) எல் ஓயாவில் குளிப்பதற்குச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெயாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரும், குடாஓயா, லபுதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதி ஒருவருமே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
மேலும் காணாமல் போனவர்களை தேடி வெயாங்கொடை பொலிஸ் அதிகாரிகள், பிரதேசவாசிகள், இராணுவம் மற்றும் கடற்படையினரின் ஆதரவுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.