எப்போதும் இளமையாக இருக்க இந்த மூன்று உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும் என நீதா அம்பானியின் உடற்பயிற்சி நிபுணர் கூறியுள்ளார். இதை விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
அனந்த் அம்பானியை 18 மாதங்களில் 108 கிலோ எடை குறைக்கவும், நீதா அம்பானியை 18 கிலோ எடை குறைக்கவும் உதவிய பிரபல உடற்பயிற்சி பயிற்சியாளர் வினோத் சன்னா, இப்போது வயதாவதை எதிர்த்து போராடக்கூடிய உணமுறை பற்றி கூறியுள்ளார்.
இந்த உணவை உண்ணுவதால் இளமை பொலிவை மீண்டும் கொண்டு வரலாம். ஆற்றல், சரும ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த உயிர்ச்சக்தியைப் பராமரிப்பதில் ஊட்டச்சத்து மிகவும் பங்களிக்கும் என வினோத் சன்னா கூறியுள்ளார்.
1. அதன்படி சமநிலையான உணவு
இளமையாகத் தோன்றுவதும் உணருவதும் நமக்குள் இருக்கும் உள்ளுணர்வு. நமது உடல் ஆரோக்கியமாக செயல்பட நாம் சாப்பிடும் உணவிலும் புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்புகளின் சரியான கலவை வேண்டும் என வினோத் சன்னா கூறுகிறார்.
2. வயதை துரிதப்படுத்தும் உணவுகளைக் குறைத்தல்
கலோரி இருக்கும் உணவுகள் தான் முன்கூட்டிய வயதானதற்கு முதல் காரணம் என்று சன்னா எச்சரிக்கிறார். எனவே மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை நிறைந்த சிற்றுண்டிகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் இதற்கு பங்களிக்கின்றன.
ஆக்ஸிஜனேற்ற அழுத்தம், என்பது சுருக்கங்கள் மற்றும் தோல் சேதத்தை துரிதப்படுத்துகிறது. இது வீக்கம், நாள்பட்ட சுகாதார நிலைமைகளுக்கு வழிவகுக்கிறது இதனால் உடல் சக்தி குறைந்து, சோம்பலாகவும் சோர்வாகவும் உணர வைக்கும்.
3. நீண்ட ஆயுள் உணவு
நாம் எப்போதும் வயிறு நிரம்ப சாப்பிட கூடாது. இது உடலின் ஆரோக்கியத்தில் பல தீங்கை கொண்டு வந்து சேர்க்கும். இதனால் வயிறு ஒரு அளவான உணவை தினமும் எடுத்துக்கொள்ள மனதை கட்டுப்படுத்த வேண்டும்.
மன அழுத்தத்தில் இருக்க கூடாது. இது பசியை குறைத்து நமது எடையை அதிகரிக்க வழிவகுக்கும். பச்சை காய்கறிகள் கலோரிகள் இல்லாத பழங்கள் சாப்பிடுவது நல்லது. மேலும் சாப்பிட்டவுடன் பழம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
உணவின் போது உடனிருப்பதன் மூலமும், கவனச்சிதறல்களைத் தவிர்ப்பதன் மூலமும், தனிநபர்கள் ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளைச் செய்யலாம். இதனால் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் இளமைப் புத்துணர்ச்சியையும் மேம்படுத்தலாம். இரவில் தூங்கும் போது சாப்பிடுவதை தவிர்த்து லேசான உணவுகளை எடுத்துக்கொள்வதுடன் ஒரு கப் பால் எடுத்துக்கொள்வது நல்லது.

