இலங்கையுடன் பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காக அமெரிக்காவின் 20 பேர் அடங்கிய குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.
குறித்த அமெரிக்க குழுவினர் நேற்றிரவு போயிங் சி-17 குளோப்மாஸ்டர் என்ற விமானத்தில் கொழும்பு விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
உயர்மட்ட பேச்சுவார்த்தை
நாட்டுக்கு வந்த குழுவில் இந்தோ பசுபிக்கின் பாதுகாப்பிற்கான அமெரிக்காவின் முக்கிய அதிகாரியொருவர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளார்.
அதேவேளை அமெரிக்க குழுவினரின் விஜயத்தை முன்னிட்டு கொழும்பு விமானநிலையத்திலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளிற்காகவே இந்த விஜயம் இடம்பெறுவதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்