இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக தற்போது பல இடங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன என இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
புனித பல்லின கோயில், பேரதெனிய தாவரவியல் பூங்கா, யால தேசிய பூங்கா, பின்னவலை யானைகள் சரணாலயம், ஹார்டன் சமவெளி தேசிய பூங்கா, மின்னேரியா தேசிய பூங்கா, மிரிச மற்றும் சிங்கராஜ வனம் ஆகியவை இவ்வாறு திறக்கப்பட்டுள்ளன.
வனவிலங்கு பூங்காக்கள் மற்றும் ஏனயை இடங்கள் திறக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து, பார்வையாளர்களுக்காக பல தளங்கள் இப்போது திறக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.