இலங்கையில் கோட்டாபய அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் கொழும்பு – காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன் நடைபெற்றுவரும் அரசாங்கத்திற்கு எதிரான தன்னெழுச்சி போரட்டம் இரு வாரங்களை கடந்தும் தொடர்கின்றது.
இதேவேளை, காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இன்றையதினம் (24-04-2022) கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காலிமுகத்திடலுக்கு போராட்டப் பேரணியை சற்றுமுன் ஆரம்பித்துள்ளனர்.
மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தினை தடுப்பதற்காக காலிமுகத்திடல் வீதிகளுக்கு பாதுகாப்பு தரப்பினால் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் ஏராளமான இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை வீதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வீதித்தடை காரணமாக குறித்த வீதியை பயன்படுத்துவோர் கடும் சிரமங்களுக்கு உட்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த வீதியால் பயணத்தை மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வீதித்தடைகள் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கினர்.