பிறந்து பதினைந்து நாட்களே ஆன ஒரு பச்சிளம் குழந்தை மற்றும் இரண்டு மூன்று வயதில் இன்னுமொரு சிறுவனுடன் இளம் பெற்றோர் நடுவீதிக்கு வந்துள்ள துயர சம்பவம் ஒன்று இலங்கையில் பதிவாகியுள்ளது.
வாடகை கொடுக்க வழியின்றி குறித்த இளம் தம்பதி நடு வீதிக்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த தம்பதிகள் பிஞ்சுக் குழந்தைகளுடன் பாணந்துறை பஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளதுடன், அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களும் வலுத்து வருகின்றன.
மேற்தட்டு மக்கள் அப்படியே இருக்க, நடுத்தர மற்றும் வறிய மக்களே இதனால் பெரிதும் பாதிக்கப்படுள்ளனர். வேலையின்றி, குடும்பத்தை காப்பாற்ற என்ன செய்யப்போகின்றோம் என்கின்ற கவலை மக்களை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கின்றது.
எனினும் இரக்கமற்ற அரசாங்கம் என்ன தான் செய்யப்போகின்றது? மக்களை பட்டினியால் சாகவிடப்போகின்றார்களா? இன்று இந்த குடும்பம் பரிதவிப்பதுபோல நாளை இன்னும் எத்தனையோ குடும்பங்கள் வாழ் வழியின்றி இவ்வாறு வீதிக்கு இறங்கு நிலை வரலாம்