ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச இன்று நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில் தற்போதைய அமைச்சரவையின் பிரதானியாக ஜனாதிபதி செயற்படுகின்றார். அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் முக்கிய சில அமைப்பு பதவிகளை வகிக்கின்றார்.
அதுமட்டுமல்லாமல் சமல் ராஜபக்சவும், நாமல் ராஜபக்சவும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவிகளை வகிக்கின்றனர்.
இதேவேளை இன்று பசில் ராஜபக்க்ஷ அமைச்சு பதவியை ஏற்றபின்னர் அமைச்சரவையில் உள்ள ராஜபக்சக்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது