இலங்கையில் 265 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றத்திற்குகாக கைது செய்யப்பட்ட மாலைதீவு பிரஜைக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
இந்நிலையில், குறித்த வழக்கு நேற்று (11-02-2022) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாலைதீவு பிரஜையான லத்தீப் இஷூன் என்பவருக்கே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த தண்டனையை விதித்துள்ளார்.
இதன்படி, நபருடன் கைதான மற்றுமொரு சந்தேகநபரை நிரபராதியாக கருதி விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், பம்பலப்பிட்டி பகுதியில் வைத்து சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.