இரத்தினபுரி மாவட்டம், பலாங்கொடை தேர்தல் தொகுதியிலுள்ள “இம்புல்பே” பிரதேசத்தின் பெயரை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, இம்புல்பே பிரதேசம் இனி “பெலிஹுல்ஒய” என்று அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில், மாகாண ஆளுநர் டிக்கிரி கெப்பேகடுவ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இம்புல்பே பிரதேசத்தை சுற்றுலா தளமாக மாற்றி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அழைக்கும் நோக்கிலேயே, இந்த பிரதேசத்தின் பெயர் “பெலிஹுல்ஒய” என மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இம்புல்பே பிரதேசத்திலுள்ள அரச நிறுவனங்கள் பெலிஹுல்ஒய என்றே அழைக்கப்படவுள்ளது.
“இம்புல்பே” பிரதேச சபை, பிரதேச செயலகம், விவசாய சேவை மத்திய நிலையம், கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களும் இனி, பெலிஹுல்ஒய என்ற பெயரிலேயே அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது