உலகின் சில நாடுகளில் தற்போது காணப்படும் புதிய கொரோனா திரிபு இலங்கையில் உள்ளனவா என்பதை கண்டறிவதற்கான மரபணுவரிசை முறை சோதனையை இலங்கை ஆரம்பித்துள்ளது என சுகாதார துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பத்தாம் திகதி முதல் நாங்கள் மரபணுவரிசை முறை சோதனையை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்த சண்டிம ஜீவந்தர, இதன் முடிவுகள் 20ம் திகதி தெரியவரும் என தெரிவித்துள்ளார்.
இந்த தரவுகளை சுகாதார அமைச்சிடம் பகிர்ந்துகொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.
புதிய திரிபுகள் இலங்கையில் இல்லை
இதேவேளை ஏற்கனவே முன்னெடுத்துள்ள இவ்வாறான சோதனைகளை தீவிரப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு இதுவரை புதிய திரிபுகள் எவற்றையும் இலங்கையில் அடையாளம் காணவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கையில் இதுவரை புதிய கொரோனா திரிபு எதனையும் அடையாளம் காணவில்லை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் தலைமை நிபுணர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.