இரத்தினபுரி – பெல்மடுல்ல சிங்கபுர பிரதேசத்தில் பழம் பறிப்பதற்காக மரத்தில் ஏறிய நபர் மரக்கிளையுடன் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த 66 வயதான 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மரத்திலிருந்து கீழே விழுந்தவரை அயலவர்கள் கஹவத்தை போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.