சுற்றுலாப் பயணியின் கையடக்கத் தொலைபேசியை காட்டு யானை ஒன்று உண்ண முயற்சிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் இலங்கையின் தேசிய பூங்கா ஒன்றில் நடைபெற்றுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் சஃபாரி ஜீப்பில் பயணித்துகொண்டிருந்த போதே யானையை காணொளி எடுக்க முயன்றபோது அவரது கையடக்கத் தொலைபேசி தவறுதலாக கீழே விழுந்துள்ளது.
இதன்போது, காட்டு யானை அந்த கையடக்கத் தொலைபேசியை தனது தும்பிக்கையால் எடுத்து சாப்பிட முயற்சித்தது.
எனினும், அதன் பின்னர், அது உணவு அல்ல என்று தெரிந்த யானை, கையடக்கத் தொலைபேசியை தரையில் எறிந்து விட்டு நடக்கத் தொடங்குவதை குறித்த காணொளி வெளிக்காட்டுகிறது.