கொழும்பு- பத்தரமுல்லையில் குரவரவு திணைக்களத்தின் முன்பாக கடவுச்சீட்டு பெறுவதற்கு வரிசையில் காத்திருந்த கர்ப்பவதி பெண் ஒருவர் இன்று அதிகாலை குழந்தையை பிரசவித்துள்ளார்.
வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற வந்த ஹட்டனை சேர்ந்த பெண் ஒருவருக்கே இவ்வாறு அங்கு குழந்தை பிறந்துள்ளது.
வரிசையில் நின்று பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணைப் பார்த்த இராணுவ வீரர்கள், அவரை காசல் வைத்தியசாலையில் அனுமதிக்க ஏற்பாடு செய்தனர்.
எனினும் அதற்குள் அவருக்கு குழந்தை பிறந்துவிட்டதாகவும் இந்த நிலையில், தாயும் கைக்குழந்தையும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.