உள்நாட்டுக் கடனைத் தீர்ப்பதற்கு போதுமான அளவு பத்திரங்கள் விற்பனை செய்யப்படாமை காரணமாக இலங்கை மத்திய வங்கி அண்மையில் மேலும் ஒரு 64 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
160 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பிணைமுறி ஏலத்தின் மூலம் இலங்கை மத்திய வங்கிக்கு 124 பில்லியன் ரூபாவையே ஈட்ட முடிந்தது.
அதன் காரணமாகவே மேலும் 64 பில்லியன் ரூபாய் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் உள்நாட்டு கடனை செலுத்துவதற்கு பணம் சம்பாதிப்பதற்கான பிற ஆதாரங்கள் இல்லாததால் பணம் அச்சிடுவதற்கு வழிவகுத்தது.