இலங்கையில் தொற்றாத நோய்களால் வருடாந்தம் சுமார் 1 இலட்சத்து 20 பேர் உயிரிழப்பதாக தேசிய தொற்றா நோய்களுக்கான சபையில் தெரியவந்துள்ளது.
குறித்த நோய்களில் புகையிலை பயன்பாடு, ஆரோக்கியமற்ற மதுபான பயன்பாடு, உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் அதிக கொழுப்பு அளவு ஆகியவை அடங்கும்.
இந்த நிலைமையை தவிர்க்கும் வகையில், பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் மட்டுமன்றி ஏனைய சிற்றுண்டிச்சாலைகளிலும் ஆரோக்கியமான உணவுகளை விற்பனை செய்வதற்கும் பாடசாலை மாணவர்களை உடல் செயல்பாடுகளுக்கு வழிநடத்துவதற்கும் முறைமை ஒன்றை தயாரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆம் திகதி சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தலைமையில் சுகாதார அமைச்சில் நடைபெற்ற தொற்றா நோய்கள் தொடர்பான தேசிய சபையில் இந்த தகவல் வெளியிடப்பட்டது.