இலங்கையில் உள்ள குடும்பங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் குறைந்த அல்லது மலிவான உணவை உண்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
உலக உணவுத் திட்டத்தின் மாதாந்த அறிக்கையில் இது ஊட்டச்சத்து குறைபாட்டின் அபாயத்தை உயர்த்தியுள்ளதைக் காட்டுவதாக அந்த சபை மேலும் கூறியுள்ளது.
தொடர்ச்சியாக இரண்டு பருவங்களில் இருந்து நெல் அறுவடை குறைவதால் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரிக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் விலை 20 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் வழங்கல் பற்றாக்குறை மற்றும் அதிக உற்பத்திச் செலவு காரணமாக உள்ளூர் அரிசி வகைகளின் விலை 6 வீதம் அதிகரித்துள்ளதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள குடும்பங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் குறைந்த அல்லது மலிவான உணவை உண்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.Karihaalan News
No Comments1 Min Read

