நாட்டில் கைத்தொலைபேசிகளின் விலைகள் பெருமளவில் குறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் கைத்தொலைபேசிகளின் விலை 18 தொடக்கதம் 20 வீதங்களால் குறைவடைந்துள்ளது.
இந்த மகிழ்ச்சி செய்தியை இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரின் பெறுமதி 300 ரூபா வரை வீழ்ச்சியடைந்துள்ளது.
இதையடுத்து, கடந்த ஆண்டில் டொலர் பெறுமதி அதிகரித்திருந்த போது உயர்வடைந்திருந்த கைத்தொலைபேசிகளின் விலைகள் தற்போது மீண்டும் குறைவடைந்துள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் சமித் செனரத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, 515,000 முதல் 530,000 ரூபா வரை காணப்பட்ட ஐபோன் 15 pro max கைத்தொலைபேசி விலை தற்போது 375,000 ரூபா வரை குறைவடைந்துள்ளதாக சமித் செனரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஏனைய கைத்தொலைப்பேசிகளின் விலைகளும் பெருமளவில் குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்