இலங்கையில் இந்த ஆண்டின் கடந்த 26 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்ததாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
எனினும், கடந்த ஆண்டு (2023) அதிவேக நெடுஞ்சாலைகளில் நடந்த விபத்துகளில் 5 பேர் மட்டுமே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் போது வீதிகளில் வாகனங்களுக்கு இடையில் சரியான இடைவெளியை பேணாமையே பல விபத்துக்களுக்கு காரணம் என வீதி அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.