மேல்மாகாண முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளனர்.
மேல்மாகாண முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்காக பதிவுக் கட்டணம் ஒன்றை செலுத்த வேண்டிய தேவை உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பதிவுக் கட்டணம் என்ற போர்வையில் மேலதிக பணத்தை செலுத்த வேண்டியுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பதிவுக் கட்டணத்தைச் செலுத்தாத முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு மேலதிகமாக ஐந்து லீட்டர் எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று அதன் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.