இலங்கையில் ஐந்தில் ஒரு பெண் தனது வாழ்நாளில் ஒருமுறையாவது தனது துணையினால் உடல் ரீதியாக அல்லது தகாத முறையில் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது.
இந்த உடல் மற்றும் தகாத முறை துஷ்பிரயோகம், தங்கள் கணவர், இணைந்து வாழும் துணை அல்லது காதலன் என்று அழைக்கும் இந்த நெருங்கிய கூட்டாளிகளிடம் இருந்து நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் கொழும்பு அலுவலகம் நேற்று காலை கொழும்பில் உள்ள ஹில்டன் ரெசிடென்ஸில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை நடத்திய மகளிர் நல ஆய்வு முடிவு மூலம் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
இந்த கணக்கெடுப்பின் தரவுகளின் பகுப்பாய்வு, இதுபோன்ற உடல் ரீதியான துஷ்பிரயோகங்களை அனுபவித்த பெரும்பாலான பெண்கள் தகாத முறையில் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் பெண்களைக் கட்டுப்படுத்துவதில் அவர்களின் பங்குதாரரின் செல்வாக்கு, 19.1 சதவீதமாக கண்டறியப்பட்டது.
ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி குன்லி அடேனி மற்றும் அதன் தேசிய வேலைத்திட்டங்கள் மற்றும் கொள்கைப் பகுப்பாய்வாளர் திருமதி ஷரிகா குரே ஆகியோரும் உரையாற்றியபோது இதனை தெரிவித்தனர்.