இலங்கையின் முதல் தமிழ் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் காலமானார்.
யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவி, ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் (வயது -77 காலமானதை அவரது குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சாந்தா அபிமானசிங்கம் இலங்கையின் முதல் தமிழ் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி என்பதுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வட மாகாணத்திற்கான தலைவராகவும் இவர் செயற்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் நீண்டகால தலைவியாக இருந்த அவர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நீதிமன்றங்களின் மேம்படுத்தல்களிலும் சட்டத்தரணிகளின் நலன்களிலும் அக்கறையுடன் செயற்பட்டார்.
இந்நிலையில் அவரது மறைவுக்கு பலரும் இரங்க்ல் தெரிவித்து வருகின்றனர்.