இலங்கையில் அடுத்த 36 மணித்தியாலத்திற்கு செல்லுபடியாகும் புதிய வானிலை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
பருவமழைக்கு முந்தைய காலநிலையின் தாக்கம் காரணமாக கடும் மழை மற்றும் காற்றின் நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலின் சில இடங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், இலங்கையின் ஊடாக அவ்வப்போது 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.